'தடா' பெரியசாமி பிரசாரம் அ.தி.மு.க., அறிவிப்பு

பா.ஜ.,விலிருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்த,' தடா' பெரியசாமி, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரசாரம் செய்வார் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
பா.ஜ., பட்டியலின அணி மாநிலத் தலைவராக இருந்தவர் தடா பெரியசாமி. இவர் கடந்த மாதம் 30ம் தேதி பா.ஜ.,விலிருந்து விலகி, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.
அவர் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார், என, அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது. ஏப்., 4 காஞ்சிபுரம்; ஏப்., 6 விழுப்பரம்; ஏப்., 8 சிதம்பரம்; ஏப்., 10 நாகப்பட்டினம்; ஏப்., 12 திருவள்ளூர்; ஏப்., 13 கள்ளக்குறிச்சி; ஏப்., 14 சேலம்; ஏப்., 15 நாமக்கல்; ஏப்., 16 நீலகிரி ஆகிய தொகுதிகளில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து