வெல்லப்போவது கவுண்டரா... செட்டியாரா?

பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அத்தொகுதி எம்.பி., சண்முகசுந்தரம், கட்சித் தலைமையிடம் 50,000 ரூபாய் செலுத்தி மனு தாக்கல் செய்திருக்கிறார். இவர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
ஆனால், பொள்ளாச்சி தொகுதியில் செட்டியார் சமுதாய மக்களும் அதிகம். அதனால் அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து, அந்த ஜாதி மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நினைக்கிறது தி.மு.க., தலைமை.தற்போது கொங்கு வேளாள கவுண்டருக்கு சீட் கொடுத்தால், அ.தி.மு.க., சார்பில் செட்டியார் ஜாதியைச் சேர்ந்தவரை நிறுத்தி வெற்றி வாய்ப்பை தட்டிச்சென்று விடுவர் என்று நினைக்கிறது. அதனால், செட்டியார் ஜாதியைச் சேர்ந்த படித்த தகுதியானவர்களை தேடி மனு தாக்கல் செய்ய வற்புறுத்திஉள்ளது.
அதனடிப்படையில் செட்டியார் ஜாதியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அமுதஜோதி, விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இதேபோல், பொள்ளாச்சியை சொந்த ஊராகக் கொண்ட செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது.
வாசகர் கருத்து